தென்னிந்திய வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வு மையம்
தென்னிந்திய வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வு மையம் 12.09.2025 அன்று பொன்னேரி முருகன் பார்ட்டி ஹாலில் வரலாற்றுத்துறை மற்றும் தமிழ்த்துறை இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு “Creating Research Interest in Young Mind” என்ற கருப்பொருளில் Orientation Program நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை தென்னிந்திய வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வு மையத்தின் நிறுவனர் திருமதி நாகபூஷணம் அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.
மேலும், பொன்னேரி சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் (செங்கல், பானை ஓடுகள், கற்கருவிகள்) கண்காட்சியாக அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு பயனுள்ளதாக விளக்கப்பட்டது.
பொன்னேரி உ.நா. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் முனைவர் மாறவன்மன் அவர்கள் இந்நிகழ்ச்சியில் தலைமை ஏற்று சிறப்புரையாற்றினார்.
மயிலாப்பூர் ராமகிருஷ்ண மிஷன் விவேகானந்தா கல்லூரியின் தமிழ்த்துறை உதவி பேராசிரியர் முனைவர் பெரியசாமி அவர்கள் முதல் அமர்வில் மாணவர்களுக்கு தமிழ்த்துறையில் ஆய்வின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.
பொன்னேரி உ.நா. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியர் மற்றும் தேர்வுத்துறை கண்காணிப்பாளர் முனைவர் சு. ஜெகதீஸ்வரன் அவர்கள் இரண்டாம் அமர்வில் மாணவர்களுக்கு வரலாற்று ஆய்வின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
இந்நிகழ்ச்சியின் முடிவில் தென்னிந்திய வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வு மையத்தைச் சேர்ந்த செல்வி வெ. பானுப்ரியா அவர்கள் நன்றியுரையாற்றினார்.