தென்னிந்திய வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வு மையம்
22.01.2023 அன்று திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தென்னிந்திய வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வு மையத்தின் சார்பில் வரலாறு மற்றும் பண்பாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. பொன்னேரி நகராட்சி தலைவர் மருத்துவர் க. பரிமளம் விஸ்வநாதன் அவர்கள் கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
இக்கருத்தரங்கில் “இந்திய வரலாறு தமிழ்நாட்டிலிருந்துதான் தொடங்குகிறது – திருவள்ளூர் மாவட்டத்தின் வரலாற்றுத் தொன்மை” என்ற தலைப்பில் பேராசிரியர் முனைவர் சு. ஜெகதீஸ்வரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
முனைவர் வி. லட்சுமிபதி, முதல்வர், ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொன்னேரி, முனைவர் ஏ. ரவி, உதவி பேராசிரியர், உ.நா. அரசு கல்லூரி, பொன்னேரி, முனைவர் பெ. அண்ணாதுரை, உதவி பேராசிரியர், தாக்கூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை, க. ரவிக்குமார் பொன்னேரி திமுக நகரச் செயலாளர், எ. தவமணி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், ர. காளமேகம் வழக்கறிஞர், பொன்னேரி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
தென்னிந்திய வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வு மையம் (14.03.2025) தமிழ் இலக்கியங்கள் காட்டும் தமிழர் வரலாறும் பண்பாடும் என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில் 2 அமர்வுகள் நடைபெற்றன.
இந்நிகழ்வு தொடக்க விழாவில் கல்லூரியின் செயலர் திரு. ப. ரமேஷ் அவர்கள் தலைமை உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் அவர்களும், கூடுதல் முதல்வர் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். இதனைத் தொடர்ந்து ஆய்வுத் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது.
அடுத்த நிகழ்வாக பேராசிரியர் முனைவர் ம. எஸ்தர் ஜெகதீஸ்வரி, தமிழ்த்துறை, எத்திராஜ் கல்லூரி, சென்னை அவர்கள் “தமிழ் இலக்கியங்களில் பண்பாடு” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
தமிழர் வரலாறு என்ற முதல் அமர்விற்கு முனைவர் ஏ. ரவி, இணைப் பேராசிரியர், வரலாற்றுத் துறை, உ.நா. அரசு கல்லூரி, பொன்னேரி அவர்கள் தலைமை ஏற்று சிறப்பாக நடத்தினார். இரண்டாம் அமர்வான தமிழர் பண்பாடு முனைவர் ப. தேவாராஜ், இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, உ.நா. அரசு கல்லூரி, பொன்னேரி அவர்களால் தலைமை ஏற்று நடத்தப்பட்டது.
தென்னிந்திய வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வு மையம், பொன்னேரி மற்றும் ஸ்ரீராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ் துறை, திருவள்ளூர் இணைந்து தமிழ் இலக்கியங்களில் தமிழர் அறச்சிந்தனைகள் என்ற ஆய்வு பொருளில் தேசிய கருத்தரங்கம் 01.11.2025 அன்று ஸ்ரீராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முனைவர் எ. மணவாளன், தமிழ்துறை தலைவர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். அவரைத் தொடர்ந்து முனைவர் ஸ்ரீ. சுமதி, ஸ்ரீராம் கல்வி அறக்கட்டளை அறங்காவலர், முனைவர் த. சரவணன் கல்லூரி முதல்வர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து ஆய்வுத் தொகுப்பு நூல் திருமதி பா. வசுகி பார்த்தசாரதி ஸ்ரீராம் கல்வி அறக்கட்டளை அறங்காவலர் அவர்களால் வெளியிடப்பட்டது.
பேராசிரியர் முனைவர் சி. இளங்கோ, தமிழ்த்துறை, பச்சையப்பன் கல்லூரி, சென்னை அவர்கள் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியின் நிறைவில் முனைவர் த. சரவணன் கல்லூரி முதல்வர் அவர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்த ஆய்வாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். தென்னிந்திய வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வு மையத்தின் பொருளாளர் செல்வி ந. சிவலட்சுமி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.