Call to Donate
Logo SIHCRC

பயிலரங்கம் (WORKSHOP)

தொல்லியல் ஆய்வுகளும் தமிழ்நாட்டு வரலாறும்

தென்னிந்திய வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வு மையம் இரண்டு நாட்கள் (20.12.2023 – 21.12.2023) “தொல்லியல் ஆய்வுகளும் தமிழ்நாட்டு வரலாறும்” என்ற தலைப்பில் தேசிய பயிலரங்கம் நடத்தப்பட்டது. இதில் 6 அமர்வுகள் நடைபெற்றன.

முதல் அமர்வு

பேராசிரியர் முனைவர் சு. ராசவேல், தலைமை ஆலோசகர், தொல்லியல், இந்து சமய அறநிலையங்கள் துறை, தமிழ்நாடு அரசு, சென்னை அவர்கள் “தொல்லியல் ஆய்வுகளும் தமிழ்நாட்டு வரலாறும்” என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்.

இரண்டாம் அமர்வு

முனைவர் நா. மார்க்சிய காந்தி, தொல்லியலாளர் (பணி நிறைவு), தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அவர்கள் “அண்மைக்கால அகழாய்வுகளால் தமிழக வரலாறு பெற்ற சில தெளிவுகள்” என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்.

மூன்றாம் அமர்வு

பேராசிரியர் முனைவர் சு. ஜெகதீஸ்வரன், துறைத் தலைவர், வரலாற்றுத் துறை, உ.நா. அரசு கல்லூரி, பொன்னேரி அவர்கள் “தமிழ்நாட்டின் தொல்பழங்காலம்: குசைத்தலைஆற்று நாகரிகம்” என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்.

நான்காம் அமர்வு

முனைவர் சி. இளங்கோ, உதவி பேராசிரியர், தமிழ்த்துறை, சி. கந்தசாமி நாயுடு கல்லூரி, சென்னை அவர்கள் “தொல்லியலும் சங்க இலக்கியமும்” என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்.

ஐந்தாம் அமர்வு

முனைவர் ஆ. பத்மாவதி, முதுநிலை கல்வெட்டாய்வாளர் (பணி நிறைவு), தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அவர்கள் “கல்வெட்டுகள் காட்டும் தமிழ் எழுத்து வளர்ச்சி: தமிழ்பிராமி முதல் வட்டெழுத்து வரை” என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்.

ஆறாம் அமர்வு

முனைவர் கோ. சசிகலா, மாநில சுவடிக் குழும ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அவர்கள் “தமிழக நடுகல் மரபும் பண்பாடும்” என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்.

கருத்தரங்கத்தின் நிறைவு விழாவில் பொன்னேரி நகராட்சி தலைவர் மருத்துவர் க. பரிமளம் விஸ்வநாதன் அவர்கள் கருத்தரங்கத்தில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.